ஓட்டை கவர், ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ்... என்னடா நடக்குது இங்க... செம்ம கடுப்பில் இருக்கும் பிசிசிஐ!

புதுடெல்லி: இந்தியா, இலங்கை அணிகள் மோதயிருந்த முதல் டி-20 போட்டி மோசமான பராமரிப்பு காரணமாக ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதால் பிசிசிஐ கடுப்பில் உள்ளதாக தெரிகிறது.

வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி கவுஹாத்தியில் நடக்கயிருந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் தேர்வுச் செய்தார். ஆனால் போட்டி துவங்கும் முன் கனமழை பெய்தது.

ஓட்டை கவர்
இதையடுத்து மைதான பணியாளர்கள் வழக்கம் போல கவரைக் கொண்டு ஆடுகளத்தை மூடினர். ஆனால் அந்த கவரில் ஒட்டை இருந்ததாக தெரிகிறது. இதில் புகுந்த மழை நீர், ஆடுகளத்தை ஈரப்படுத்தியது. இதனால் மழை நின்ற பின் மைதானத்தை சுத்தம் செய்த போது, ஆடுகளத்தில் இருந்த ஈரத்தால் போட்டி துவங்கப்படவில்லை.

அயர்ன் பாக்ஸ்
இதையடுத்து வேக்யூம் கிளீனர் கொண்டு ஆடுகளத்தை சரிசெய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஹேர் டிரையர் கொண்டு முயற்சித்தனர். இதுவும் பலன் அளிக்காத காரணத்தால் அயன் பாக்ஸ் கொண்டும் பணியாளர் எடுத்த முயற்சி தோல்வியடைய போட்டி முடிவு எட்டப்படவில்லை என அம்பயர்கள் அறிவிக்க, ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

சர்வதேச கிரிக்கெட்டா?
ஒரு சர்வதேச போட்டியில் இப்படி காமெடி செய்த நிகழ்வு அரங்கேறியதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அசாம் கிரிக்கெட் சங்கத்தின் இந்த கவனக்குறைவால் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

Popular posts
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 120-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்
Image

<no title>கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய
Image
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 120-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்